• Dec 17 2025

திட்டமிடப்பட்டிருந்த கொலைகள்; துப்பாக்கியுடன் சிக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர்

Chithra / Dec 15th 2025, 4:08 pm
image


எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, நடத்திய சோதனை நடவடிக்கைகளுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேகநபரை படபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாதமுல்ல பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


சந்தேகநபர் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும், இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திட்டமிடப்பட்டிருந்த கொலைகள்; துப்பாக்கியுடன் சிக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர் எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, நடத்திய சோதனை நடவடிக்கைகளுக்கமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபரை படபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாதமுல்ல பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சந்தேகநபர் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும், இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement