• Mar 09 2025

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Chithra / Mar 7th 2025, 2:12 pm
image


நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement