• Jul 09 2025

லலித் மற்றும் குகனின் வழக்குகள் சிஐடிக்கு மாற்றம்

Chithra / Jul 8th 2025, 2:53 pm
image

 

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறிய அமைச்சர், அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 17 சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடர்பான உண்மைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

வழக்கின் முன்னேற்றம் குறித்து ஜூன் 3, 2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் அச்சுவேலி பொலிஸ் மற்றும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தார். 

அதன்படி, வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஜூன் 11, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதாக அமைச்சர்  கூறினார்.

இந்த விசாரணையை இனிமேல் சிஐடியின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளும் என்று அமைச்சர் கூறினார்.

லலித் மற்றும் குகனின் வழக்குகள் சிஐடிக்கு மாற்றம்  லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த வழக்கு கடைசியாக 2014 ஆம் ஆண்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதுவிசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறிய அமைச்சர், அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 17 சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடர்பான உண்மைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.வழக்கின் முன்னேற்றம் குறித்து ஜூன் 3, 2025 அன்று பதில் பொலிஸ்மா அதிபர் அச்சுவேலி பொலிஸ் மற்றும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தார். அதன்படி, வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஜூன் 11, 2025 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டதாக அமைச்சர்  கூறினார்.இந்த விசாரணையை இனிமேல் சிஐடியின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு கையாளும் என்று அமைச்சர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement