• Oct 24 2024

ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Aug 1st 2023, 8:07 am
image

Advertisement

கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி வருவாய் தொடர்ந்தும் இரண்டாவது மாதமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மே மாதமும் ஏற்றுமதி வருவாய் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக பதிவாகியிருந்தது.

இதன்படி, மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்றுமதி வருவாய் 5.9 பில்லியன் டொலராகும்.

எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் கடந்த ஜூன் மாதம் சுற்றுலாத்துறையின் ஊடாக 123 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 173 சதவீத வளர்ச்சியாகும்.

இதேவேளை, ஆண்டின் முதல் 6 மாதக்காலப்பகுதியில் 2 ஆயிரத்து 823 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணவனுப்பல் ஊடாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு samugammedia கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி வருவாய் தொடர்ந்தும் இரண்டாவது மாதமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.கடந்த மே மாதமும் ஏற்றுமதி வருவாய் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக பதிவாகியிருந்தது.இதன்படி, மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்றுமதி வருவாய் 5.9 பில்லியன் டொலராகும்.எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் கடந்த ஜூன் மாதம் சுற்றுலாத்துறையின் ஊடாக 123 மில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளது.இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 173 சதவீத வளர்ச்சியாகும்.இதேவேளை, ஆண்டின் முதல் 6 மாதக்காலப்பகுதியில் 2 ஆயிரத்து 823 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணவனுப்பல் ஊடாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement