• Nov 11 2024

குழந்தையின் பெற்றோர்க்கு நீதி கிடைக்கவேண்டும்!- பொதுமக்கள் ஆர்பாட்டம்!

Anaath / Aug 21st 2024, 6:38 pm
image

வவுனியா வைத்தியசாலையில் நேற்றயதினம் மரணித்த சிசுவின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி  ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று மாலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது

குழந்தையின் தாய் வலிதாங்கமுடியாமல் பலமணிநேரங்கள் கதறியபோதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலையக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும்.

குறித்தசம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கைஇல்லை. எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ளவேண்டும். அதுபோலவே சிசுவின் சட்டவைத்திய பரிசோதனையினையும் கொழும்பு வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்கவேண்டும். 

அத்துடன் பொறுப்பேஇல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள் இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.எனவே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும்வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர். 

இதேவேளை இன்று மாலை சிசுவின் சடலத்தைபார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.


குழந்தையின் பெற்றோர்க்கு நீதி கிடைக்கவேண்டும்- பொதுமக்கள் ஆர்பாட்டம் வவுனியா வைத்தியசாலையில் நேற்றயதினம் மரணித்த சிசுவின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி  ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று மாலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்த போதுகுழந்தையின் தாய் வலிதாங்கமுடியாமல் பலமணிநேரங்கள் கதறியபோதும் அவருக்கு சிசேரியன் செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலையக்கு சிகிச்சைக்காக எப்படி செல்ல முடியும்.குறித்தசம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கைஇல்லை. எனவே சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ளவேண்டும். அதுபோலவே சிசுவின் சட்டவைத்திய பரிசோதனையினையும் கொழும்பு வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்கவேண்டும். அத்துடன் பொறுப்பேஇல்லாத இந்த வைத்தியசாலைக்கு மூன்று பணிப்பாளர்கள் இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.எனவே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும்வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர். இதேவேளை இன்று மாலை சிசுவின் சடலத்தைபார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement