• May 01 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...! விசாரணை அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்க முடியாது...! சபாநாயகர் அறிவிப்பு...! samugammedia

Sharmi / Sep 21st 2023, 3:39 pm
image

Advertisement

கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடாமை குறித்து சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள் மற்றும்  மேற்படி சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்காமை தொடர்பில் பல்வேறு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால், அது தொடர்பில் உண்மையான நிலைமையை கௌரவ சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதி செயலாளரால் 03/03/2022, 14/03/2022 ஆகிய திகதிகளில் கடிதங்கள் ஊடாக எனக்கு அறிவித்ததிற்கு அமைய, சம்பந்தப்பட்ட சாட்சிகளின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில், இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வௌியிட முடியாது எனவும், நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும்  09/12/2023 அன்று அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பதை இந்த சபைக்கு அறிவிக்கிறேன் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல். விசாரணை அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்க முடியாது. சபாநாயகர் அறிவிப்பு. samugammedia கடந்த 2019ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.இன்றையதினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர்,“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கிய இரகசிய சாட்சியக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடாமை குறித்து சபையில் எழுப்பப்பட்ட விடயங்கள் மற்றும்  மேற்படி சாட்சி குறிப்புகள் அடங்கிய ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்காமை தொடர்பில் பல்வேறு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால், அது தொடர்பில் உண்மையான நிலைமையை கௌரவ சபைக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். ஜனாதிபதி செயலாளரால் 03/03/2022, 14/03/2022 ஆகிய திகதிகளில் கடிதங்கள் ஊடாக எனக்கு அறிவித்ததிற்கு அமைய, சம்பந்தப்பட்ட சாட்சிகளின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில், இரகசிய சாட்சி குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வௌியிட முடியாது எனவும், நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும்  09/12/2023 அன்று அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியின் செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பதை இந்த சபைக்கு அறிவிக்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement