• May 21 2024

சாமானியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு! – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

Chithra / Apr 30th 2024, 5:44 pm
image

Advertisement

  

சிறந்த விவசாய பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  கலந்து சிறப்பித்தார்.

மிக குறுகிய காலத்திற்குள் சிறந்த விவசாய பயிற்சி திட்டத்திற்குள் 2000 விவசாயிகளை உள்வாங்கியமை மிகச்சிறப்பான செயற்பாடென கூறினார். 

நவீன விவசாய பொறிமுறை தொடர்பான அறிவை இந்த திட்டத்தினூடாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் தெரிவித்தார்.

விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாக காணப்பட வேண்டும் எனவும், இதற்காக மத்திய, மாகாண அமைசுக்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைத்து செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும்  தெரிவித்தார்.


விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பேசப்படுவதில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் அனைவரும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அந்தவகையில் சாமானிய பொது மகன் ஒருவர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கான நிலையான மற்றும் சிறந்த சேவையினை வழங்க ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் இவ்வாறான செயற்பாடுகளை அனைவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சாமானியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு   சிறந்த விவசாய பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  கலந்து சிறப்பித்தார்.மிக குறுகிய காலத்திற்குள் சிறந்த விவசாய பயிற்சி திட்டத்திற்குள் 2000 விவசாயிகளை உள்வாங்கியமை மிகச்சிறப்பான செயற்பாடென கூறினார். நவீன விவசாய பொறிமுறை தொடர்பான அறிவை இந்த திட்டத்தினூடாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும் தெரிவித்தார்.விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியமாக காணப்பட வேண்டும் எனவும், இதற்காக மத்திய, மாகாண அமைசுக்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைத்து செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும்  தெரிவித்தார்.விவசாயிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பேசப்படுவதில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் அனைவரும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அந்தவகையில் சாமானிய பொது மகன் ஒருவர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.பொதுமக்களுக்கான நிலையான மற்றும் சிறந்த சேவையினை வழங்க ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம் எனவும் இவ்வாறான செயற்பாடுகளை அனைவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement