ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அக்கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகா எம்.பிக்கும் இடையிலான முறுகல் நிலையின் உச்சக்கட்டமாக சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கி கபீர் ஹாசீம் எம்.பியை அப்பதவிக்கு நியமிப்பற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.
மேலும், சரத் பொன்சேகா வகித்து வரும் களனி தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நாலக கொடஹேவா எம்.பியை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பதவிகளில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. நீக்கப்படுகின்றார் என்றும் அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மீதான விமர்சனம், கட்சி தீர்மானத்துக்கு எதிரான செயற்பாடுகள், ஆளுங்கட்சியுடனான உறவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்படுகின்றது என்றும் தெரியவருகின்றது.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து எதிர்வரும் 21 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தின்போது ரணிலுடன் சரத்பொன்சேகா மேடையேறவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம். முக்கிய பதவியில் திடீர் மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அக்கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகா எம்.பிக்கும் இடையிலான முறுகல் நிலையின் உச்சக்கட்டமாக சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கி கபீர் ஹாசீம் எம்.பியை அப்பதவிக்கு நியமிப்பற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.மேலும், சரத் பொன்சேகா வகித்து வரும் களனி தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நாலக கொடஹேவா எம்.பியை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பதவிகளில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. நீக்கப்படுகின்றார் என்றும் அறியமுடிகின்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மீதான விமர்சனம், கட்சி தீர்மானத்துக்கு எதிரான செயற்பாடுகள், ஆளுங்கட்சியுடனான உறவு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில்கொண்டே இந்த முடிவு எடுக்கப்படுகின்றது என்றும் தெரியவருகின்றது.அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து எதிர்வரும் 21 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தின்போது ரணிலுடன் சரத் பொன்சேகா மேடையேறவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.