கிளிநொச்சி - கரியாலை நாகபடுவான் குளத்தின் அணைக்கட்டு பாதுகாக்கும் பணி கணிசமாக நிறைவு பெற்றுள்ள நிலையிலும் மக்கள் அவதானமாக செயற்பட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் ஏற்பட்ட மழைவீழ்ச்சி காரணமாக குறித்த குளம் வான் பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில் குளத்தை பாதுகாப்பதற்காக, குளத்தின் வால்க் கட்டு படுதி வெட்டப்பட்டும், துருசும் திறந்து விடப்பட்டுள்ளது.
குளக்கட்டின் பாதுகாப்பு தொடர்பில் கண்காணித்த நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அவர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவத்தினரின் உதவியுடன், நீர்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், இடர் முகாமைத்துவ பிரிவு, விவசாயிகள் இணைந்து கட்டினை பாதுகாக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கட்டின் மிக ஆபத்தான பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது. எனினும் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கரியாலை நாகபடுவான் குளத்தின் அணைக்கட்டு பாதுகாக்கும் பணி கணிசமாக நிறைவு.Samugammedia கிளிநொச்சி - கரியாலை நாகபடுவான் குளத்தின் அணைக்கட்டு பாதுகாக்கும் பணி கணிசமாக நிறைவு பெற்றுள்ள நிலையிலும் மக்கள் அவதானமாக செயற்பட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் ஏற்பட்ட மழைவீழ்ச்சி காரணமாக குறித்த குளம் வான் பாய்ந்து வருகிறது.இந்த நிலையில் குளத்தை பாதுகாப்பதற்காக, குளத்தின் வால்க் கட்டு படுதி வெட்டப்பட்டும், துருசும் திறந்து விடப்பட்டுள்ளது. குளக்கட்டின் பாதுகாப்பு தொடர்பில் கண்காணித்த நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அவர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.இராணுவத்தினரின் உதவியுடன், நீர்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், இடர் முகாமைத்துவ பிரிவு, விவசாயிகள் இணைந்து கட்டினை பாதுகாக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர்.இந்த நிலையில் கட்டின் மிக ஆபத்தான பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது. எனினும் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.