• Aug 12 2025

பிரதமர் வெளிப்படுத்திய உண்மையால் மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாடு! - மொட்டு கட்சி சுட்டிக்காட்டு

Chithra / Aug 12th 2025, 8:33 am
image

ரொக்கட் பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை, மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை காரியாலயத்தில் உடைந்து விழுந்த ரொக்கெட் பற்றி விசேட அவதானம் செலுத்த வேண்டும். உண்மையை நீண்டகாலம் மறைத்து வைக்க முடியாது என்பது பௌத்த மத அற கோட்பாடாகும்.

மதம் மீது நம்பிக்கையில்லாத இந்த அரசாங்கத்துக்கு மத கோட்பாடுகளே இன்று எதிராக முடிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனை தொடர்புப்படுத்தி இதுவரை காலமும் முன்வைத்த குற்றச்சாட்டை பிரதமர் ஹரிணி அமரசூரிய பொய்யாக்கியுள்ளார்.

ரொக்கட் பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் வெகுவிரைவில் அணிதிரள்வார்கள் என்றார்.


பிரதமர் வெளிப்படுத்திய உண்மையால் மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாடு - மொட்டு கட்சி சுட்டிக்காட்டு ரொக்கட் பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை, மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை காரியாலயத்தில் உடைந்து விழுந்த ரொக்கெட் பற்றி விசேட அவதானம் செலுத்த வேண்டும். உண்மையை நீண்டகாலம் மறைத்து வைக்க முடியாது என்பது பௌத்த மத அற கோட்பாடாகும்.மதம் மீது நம்பிக்கையில்லாத இந்த அரசாங்கத்துக்கு மத கோட்பாடுகளே இன்று எதிராக முடிந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனை தொடர்புப்படுத்தி இதுவரை காலமும் முன்வைத்த குற்றச்சாட்டை பிரதமர் ஹரிணி அமரசூரிய பொய்யாக்கியுள்ளார்.ரொக்கட் பற்றி பிரதமர் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய உண்மை மக்கள் விடுதலை முன்னணிக்குள் பாரிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் வெகுவிரைவில் அணிதிரள்வார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement