யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவகம் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளமையால், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறித்த உணவகத்தைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு எவரும் முன்வராததற்கு அதன் அதிகப்படியான வாடகையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் இந்த உணவகம் மாதமொன்றுக்கு ரூபாய் 125,000/- வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இவ்வருடமும் அதே தொகை கோரப்பட்ட நிலையில் எவரும் முன்வராததால், பின்னர் வாடகைத் தொகை ரூபாய் 80,000/- ஆகக் குறைத்து ஏலம் விடப்பட்டது.
இருப்பினும், தற்போதுவரை எந்தவொரு தரப்பும் உணவகத்தை நடத்துவதற்கு முன்வரவில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வைத்தியசாலை புதிய கட்டடத் தொகுதிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதுள்ள உணவகம் நோயாளர் விடுதிகளில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது.
இதனால் நோயாளர்களும் அவர்களது உதவியாளர்களும் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. உணவகத்தை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
எனினும், அதிகாரிகளின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நோயாளர்களின் நலன் கருதி, வாடகைத் தொகையில் நெகிழ்வுத்தன்மையைப் பேணியாவது உணவகத்தை விரைவில் திறக்க வேண்டுமெனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பருத்தித்துறை வைத்தியசாலை உணவகம் - பெருந்தொகை வாடகையால் சிக்கல் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவகம் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளமையால், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.குறித்த உணவகத்தைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு எவரும் முன்வராததற்கு அதன் அதிகப்படியான வாடகையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடம் இந்த உணவகம் மாதமொன்றுக்கு ரூபாய் 125,000/- வாடகைக்கு விடப்பட்டிருந்தது.இவ்வருடமும் அதே தொகை கோரப்பட்ட நிலையில் எவரும் முன்வராததால், பின்னர் வாடகைத் தொகை ரூபாய் 80,000/- ஆகக் குறைத்து ஏலம் விடப்பட்டது.இருப்பினும், தற்போதுவரை எந்தவொரு தரப்பும் உணவகத்தை நடத்துவதற்கு முன்வரவில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் வைத்தியசாலை புதிய கட்டடத் தொகுதிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதுள்ள உணவகம் நோயாளர் விடுதிகளில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. இதனால் நோயாளர்களும் அவர்களது உதவியாளர்களும் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. உணவகத்தை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்பு குழுத் தலைவரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.எனினும், அதிகாரிகளின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நோயாளர்களின் நலன் கருதி, வாடகைத் தொகையில் நெகிழ்வுத்தன்மையைப் பேணியாவது உணவகத்தை விரைவில் திறக்க வேண்டுமெனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.