அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்காவிடின் அதன் பிரதிபலன் கடினமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மயூராபதி ஆலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் வளங்களை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் பயணிக்க வேண்டும். அதனையே சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முன்னெடுக்கின்றன.
அந்த விடயங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பயணிக்கவேண்டிய பாதை உள்ளது.அரசாங்கம் பயணிக்கும் பாதை சுமூகமானதாக அமைந்துள்ளது.
ஆனாலும் அவர்கள் அந்த பாதையில் உரியவாறு பயணிக்காவிடின் அதன் பிரதிபலன் கடினமானதாக அமைந்துவிடும்.
நாட்டை வீழ்ச்சி காண்பதற்கு மீண்டும் இடமளிக்க முடியாது. சரியான விடயங்களை மேற்கொள்வதன் ஊடாக மாத்திரமே அரசாங்கத்தால் சரியான பாதையில் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
நாட்டை வீழ்ச்சி காண்பதற்கு மீண்டும் இடமளிக்க முடியாது- ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டு. அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்காவிடின் அதன் பிரதிபலன் கடினமாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பு மயூராபதி ஆலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டின் வளங்களை பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் பயணிக்க வேண்டும். அதனையே சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் முன்னெடுக்கின்றன.அந்த விடயங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் பயணிக்கவேண்டிய பாதை உள்ளது.அரசாங்கம் பயணிக்கும் பாதை சுமூகமானதாக அமைந்துள்ளது.ஆனாலும் அவர்கள் அந்த பாதையில் உரியவாறு பயணிக்காவிடின் அதன் பிரதிபலன் கடினமானதாக அமைந்துவிடும்.நாட்டை வீழ்ச்சி காண்பதற்கு மீண்டும் இடமளிக்க முடியாது. சரியான விடயங்களை மேற்கொள்வதன் ஊடாக மாத்திரமே அரசாங்கத்தால் சரியான பாதையில் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.