• Feb 01 2026

ஷிரந்திக்கும் நாமலுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மீண்டும் அழைப்பு!

Chithra / Jan 31st 2026, 1:43 pm
image


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்திய  வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.


ஆனால் தனிப்பட்ட விடயம் காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ ஜனவரி 27 ஆம் திகதி அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவில்லை.


இதனால்  பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷிரந்திக்கும் நாமலுக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மீண்டும் அழைப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்திய  வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஜனவரி 27 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால் தனிப்பட்ட விடயம் காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ ஜனவரி 27 ஆம் திகதி அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவில்லை.இதனால்  பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement