நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞன் ஒருவர் உட்பட முன்றுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் - நாரம்மல வீதியில் உயன்வத்த பகுதியில் நேற்று மாலை, இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் பயணித்த லொறி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் - குருணாகல் வீதியில் கல்கந்த பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, விபத்தில் காயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹல்மில்லவெவ பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் ஹெட்டிபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வலஸ்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலஸ்முல்ல - போவல வீதியில் ஹெனகெதர பகுதியில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போவல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பயணி வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் சாரதியின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தக்கனள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டை உலுக்கிய கோர விபத்துகள்; ஒரே நாளில் இளைஞன் உட்பட மூவர் உயிரிழப்பு நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞன் ஒருவர் உட்பட முன்றுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் - நாரம்மல வீதியில் உயன்வத்த பகுதியில் நேற்று மாலை, இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குருநாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் பயணித்த லொறி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.காரின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் - குருணாகல் வீதியில் கல்கந்த பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குருநாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது, விபத்தில் காயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் ஹல்மில்லவெவ பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சடலம் ஹெட்டிபொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.அதேநேரம், வலஸ்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலஸ்முல்ல - போவல வீதியில் ஹெனகெதர பகுதியில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போவல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பயணி வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.மோட்டார் சைக்கிள் சாரதியின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்தக்கனள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.