• Nov 24 2024

அதிகரிக்கும் துரித உணவு கலாசாரம்..! இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்து..! சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Chithra / Jan 10th 2024, 2:07 pm
image


அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் இன்று  நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன. 

நாட்டில் அதிகரித்துள்ள துரித உணவு கலாச்சாரத்தால் மக்கள் எண்ணெய், சீனி மற்றும் உப்பு அதிகளவில் அடங்கிய உணவுகளை உட்கொள்கிறார்கள்.

இதன்மூலம், நாட்டு மக்களிடம் நீரிழிவு, புற்று நோய் மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்ந்து, குறித்த தொற்றாத நோய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் துரித உணவு கலாசாரம். இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்து. சுகாதார அமைச்சு எச்சரிக்கை அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சினால் இன்று  நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன. நாட்டில் அதிகரித்துள்ள துரித உணவு கலாச்சாரத்தால் மக்கள் எண்ணெய், சீனி மற்றும் உப்பு அதிகளவில் அடங்கிய உணவுகளை உட்கொள்கிறார்கள்.இதன்மூலம், நாட்டு மக்களிடம் நீரிழிவு, புற்று நோய் மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.தொடர்ந்து, குறித்த தொற்றாத நோய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement