• Mar 18 2025

அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Chithra / Mar 17th 2025, 8:33 am
image


  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. 

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. 

அதேநேரம், அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு   உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அதேநேரம், அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement