• Mar 18 2025

பட்டலந்தை போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்களை தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் -- நா.உறுப்பினர் சிறிநேசன் கோரிக்கை

Thansita / Mar 17th 2025, 10:08 pm
image


பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது.

இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாங்கள் தமிழர்கள் படுகொலை சித்திரவதை இடம்பெற்றுள்ளது.எனவே தமிழ் மக்கள் என்பற்காக அதனை மூடிமறைத்துவிட்டு  சிங்கள இளைஞர்கள் உங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டார்கள் என மட்டும் கொண்டுவந்திருப்பது கேள்விகுறியாக உள்ளது 

ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தேசிய மக்கள் சக்தி  வெளிக் கொண்டுவரவேண்டும் என நாடாளுமன்ற உறப்பினர் ஞா.சிறிறேசன் தெரிவித்தார்

மட்டு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது பேசும் பொருளாக  ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் பட்டலந்தை சித்திரவதை முகாம். 1988 ம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது 

ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது.

1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளது

37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்தை சித்திரவதை  முகாம் வெளியில் வந்திருக்காது

ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது 

எனவே  இது போன்ற  வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டது. 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் படைமுகாமில்  4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில்  படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்

இந்த சத்திருக்கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்குமாக முக்கியமான முகாமாக இயங்கியது. அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு  கல்லடி கரடியனாறு கொண்டைவெட்டுவான் உட்பட பல  முகாம்கள் காணப்பட்டது

ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடயம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது

சித்திரவதை என்பது சாதாரன விடயமல்ல. அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர் 

எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது

எனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்ப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திகு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது  

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல்; பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும். ஆனால் நாங்கள் ஆட்சியை கைப்பற்ற முடியாது

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்த்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டாரர்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடயங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள்

சத்திருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில்,  பிள்ளையாரடி போன்ற பல கிராமங்கயைச் சேர்ந்த மக்களை வெளிப்படையாக  சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை, இதற்கு நீதி இல்லை

கிழக்கு பல்கலைகழகத்தில் பட்டப் பகலில் 180க்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது

 இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநீயாயங்கள் நடந்துள்ளது ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பபுள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாங்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்

ஆனால்  உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம்  நீதியை தேடுகின்றீர்கள்;  எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

பட்டலந்தை போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்களை தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் -- நா.உறுப்பினர் சிறிநேசன் கோரிக்கை பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது.இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாங்கள் தமிழர்கள் படுகொலை சித்திரவதை இடம்பெற்றுள்ளது.எனவே தமிழ் மக்கள் என்பற்காக அதனை மூடிமறைத்துவிட்டு  சிங்கள இளைஞர்கள் உங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டார்கள் என மட்டும் கொண்டுவந்திருப்பது கேள்விகுறியாக உள்ளது ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தேசிய மக்கள் சக்தி  வெளிக் கொண்டுவரவேண்டும் என நாடாளுமன்ற உறப்பினர் ஞா.சிறிறேசன் தெரிவித்தார்மட்டு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.தற்போது பேசும் பொருளாக  ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் பட்டலந்தை சித்திரவதை முகாம். 1988 ம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது.1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளது37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்தை சித்திரவதை  முகாம் வெளியில் வந்திருக்காதுஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது எனவே  இது போன்ற  வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டது. 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் படைமுகாமில்  4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில்  படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்இந்த சத்திருக்கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்குமாக முக்கியமான முகாமாக இயங்கியது. அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு  கல்லடி கரடியனாறு கொண்டைவெட்டுவான் உட்பட பல  முகாம்கள் காணப்பட்டதுஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடயம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளதுசித்திரவதை என்பது சாதாரன விடயமல்ல. அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர் எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாதுஎனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்ப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திகு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது  தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல்; பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும். ஆனால் நாங்கள் ஆட்சியை கைப்பற்ற முடியாதுதமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்த்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டாரர்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடயங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள்சத்திருக்கொண்டான் பனிச்சையடி, கொக்குவில்,  பிள்ளையாரடி போன்ற பல கிராமங்கயைச் சேர்ந்த மக்களை வெளிப்படையாக  சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை, இதற்கு நீதி இல்லைகிழக்கு பல்கலைகழகத்தில் பட்டப் பகலில் 180க்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநீயாயங்கள் நடந்துள்ளது ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பபுள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாங்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்ஆனால்  உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம்  நீதியை தேடுகின்றீர்கள்;  எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement