• Oct 30 2024

யாழில் கணவன் உயிரிழப்பு- பிரிவை தாங்கமுடியாத மனைவி எடுத்த விபரீத முடிவு..!

Sharmi / Oct 25th 2024, 10:44 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றையதினம்(24) இடம்பெற்றது.

புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. 

இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இந்நிலையில் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் மனைவி பெருமளவான மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கணவன் உயிரிழப்பு- பிரிவை தாங்கமுடியாத மனைவி எடுத்த விபரீத முடிவு. யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம்(24) இடம்பெற்றது.புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த குடும்பஸ்தவருக்கு கடந்த 22 ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அன்றையதினமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.இந்நிலையில் கணவனின் பிரிவை தாங்கமுடியாமல் மனைவி பெருமளவான மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement