தற்போதைய அரசாங்கம் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ஒருவர் தமது பதவி காலத்தில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது.
எனவே, இது தொடர்பில் அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டை சரிவிலிருந்து ரணில் விக்ரமசிங்கவே மீட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் கணித்ததாக கூறப்படுவதற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு எதிராக அநுர அரசின் முடிவு - நாமல் வெளியிட்ட தகவல் தற்போதைய அரசாங்கம் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ஒருவர் தமது பதவி காலத்தில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது. எனவே, இது தொடர்பில் அரசியல்வாதிகள் என்ற அடிப்படையில் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டை சரிவிலிருந்து ரணில் விக்ரமசிங்கவே மீட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் கணித்ததாக கூறப்படுவதற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.