தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அது இன்று மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன்,
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் மிகவும் வலுவான பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர்களாக காணப்படும்.
மேலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் மிகக் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
எனவே, கடற்படை, மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு மிக அருகில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கம்; இன்று மேலும் தீவிரமடையும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் இன்று அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அது இன்று மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இந்த அமைப்பின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன்,வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் மிகவும் வலுவான பலத்த காற்று வீசக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர்களாக காணப்படும்.மேலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் மிகக் கொந்தளிப்பாகவும் காணப்படும்.எனவே, கடற்படை, மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.