• Mar 13 2025

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி

Chithra / Mar 12th 2025, 3:55 pm
image


வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இன்று  வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் மாவட்ட இணைப்பாளர் செ.மயூரன், புளொட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம், ஈபிஆர்எல் கட்சியின் முக்கியஸ்தர் மோசஸ், ரெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சந்திரபத்மன் உள்ளடங்கிய கட்சி உறுப்பினர்கள் கட்டுபபணத்தை செலுத்தியிருந்தனர். 


வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி இன்று  வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.அதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் மாவட்ட இணைப்பாளர் செ.மயூரன், புளொட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுலசிங்கம், ஈபிஆர்எல் கட்சியின் முக்கியஸ்தர் மோசஸ், ரெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் சந்திரபத்மன் உள்ளடங்கிய கட்சி உறுப்பினர்கள் கட்டுபபணத்தை செலுத்தியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement