பேருந்தை செலுத்திக் கொண்டிருந்த அரச பேருந்து சாரதிக்கு ஏற்ப்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாதுரியமாக பேருந்து நிறுத்தப்பட்டு பல பயணிகள் பாதுகாப்பாக பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதிக்கு திடீரென தலைச் சுற்று ஏற்பட்டு உடல் முழுவதும் வியர்வை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பேருந்தின் ஓட்டமும் தடுமாறியுள்ளது.
இதனால் சாவகச்சேரியை அண்மித்த போது சற்று தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் சாரதி உடனடியாக பேருந்தை சாவகச்சேரி வைத்தியசாலை முன் வீதியிலேயே நிறுத்திக் கொண்டு பின்னர் ஓட்டுனர் ஆசணத்தில் சரிந்து கொண்டார்.
இதனால் இடம்பெறவிருந்த பேரபத்தை சாரதி தனது சாதுரியத்தால் தடுத்திருந்தார். மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
யாழ் வந்த பேருந்தில் சாரதிக்கு திரடீரென ஏற்பட்ட சுகயீனம் தடுமாறிய பேருந்தில் நடந்தது என்ன பேருந்தை செலுத்திக் கொண்டிருந்த அரச பேருந்து சாரதிக்கு ஏற்ப்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாதுரியமாக பேருந்து நிறுத்தப்பட்டு பல பயணிகள் பாதுகாப்பாக பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதிக்கு திடீரென தலைச் சுற்று ஏற்பட்டு உடல் முழுவதும் வியர்வை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பேருந்தின் ஓட்டமும் தடுமாறியுள்ளது.இதனால் சாவகச்சேரியை அண்மித்த போது சற்று தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் சாரதி உடனடியாக பேருந்தை சாவகச்சேரி வைத்தியசாலை முன் வீதியிலேயே நிறுத்திக் கொண்டு பின்னர் ஓட்டுனர் ஆசணத்தில் சரிந்து கொண்டார். இதனால் இடம்பெறவிருந்த பேரபத்தை சாரதி தனது சாதுரியத்தால் தடுத்திருந்தார். மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இறக்கிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது