• Sep 20 2024

பணப்பையை தவறவிட்ட சாரதி - சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உன்னத செயல்!

Chithra / Dec 27th 2022, 5:22 pm
image

Advertisement

வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸை கல்முனை தலைமையக காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன பணப்பை மீட்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பகுதிக்கு கடந்த 21 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் கடமைக்காக சென்ற நிலையில் கடவத்தை பகுதியில் நள்ளிரவு பணப்பை ஒன்றினை கண்டெடுத்துள்ளார்.


பின்னர் கல்முனை தலைமையக காவல்நிலையத்திற்கு சென்று பணப்பையை உரிய நபரிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

குறித்த இப்பணப்பையில் சுமார் 44030 ரூபா பெறுமதியுடைய பணம் உட்பட சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனது பணப்பை காணாமல் சென்ற நிலையில் உரிய நபரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இந்நிலையில் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக பணப்பையை தவறவிடப்பட்ட நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீட்கப்பட்ட பணப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக பணியாற்றுகின்ற ஜெ.ஏ தம்மிக்க உதயகுமார (49) 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பணப்பையை தவறவிட்டுள்ளார்.

இவர் குளியாப்பிட்டிய காவல் பிரிவுக்குட்பட்ட  தீயாவ என்ற பகுதியில் வசிப்பதுடன் தனது பணப்பையானது அதி வேக பாதையில் பயணம் செய்கின்ற போது கடவத்தை என்ற இடத்தில் வாகன டயர் சரி பார்ப்பதற்கு இறங்கிய நிலையில் தவறவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் பணப்பை காணாமல் போன உரிமையாளர் என குறிப்பிடப்பட்ட நபர் காவல்துறை முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததை அடுத்து கல்முனை உதவி காவல்துறை அத்தியட்சகர் .எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக காவல்நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் முன்னிலையில் காணாமல் போன பணப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பணப்பையை தவறவிட்ட சாரதி - சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உன்னத செயல் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸை கல்முனை தலைமையக காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன பணப்பை மீட்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொழும்பு பகுதிக்கு கடந்த 21 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் கடமைக்காக சென்ற நிலையில் கடவத்தை பகுதியில் நள்ளிரவு பணப்பை ஒன்றினை கண்டெடுத்துள்ளார்.பின்னர் கல்முனை தலைமையக காவல்நிலையத்திற்கு சென்று பணப்பையை உரிய நபரிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.குறித்த இப்பணப்பையில் சுமார் 44030 ரூபா பெறுமதியுடைய பணம் உட்பட சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தனது பணப்பை காணாமல் சென்ற நிலையில் உரிய நபரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இந்நிலையில் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக பணப்பையை தவறவிடப்பட்ட நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீட்கப்பட்ட பணப்பை ஒப்படைக்கப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக பணியாற்றுகின்ற ஜெ.ஏ தம்மிக்க உதயகுமார (49) 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பணப்பையை தவறவிட்டுள்ளார்.இவர் குளியாப்பிட்டிய காவல் பிரிவுக்குட்பட்ட  தீயாவ என்ற பகுதியில் வசிப்பதுடன் தனது பணப்பையானது அதி வேக பாதையில் பயணம் செய்கின்ற போது கடவத்தை என்ற இடத்தில் வாகன டயர் சரி பார்ப்பதற்கு இறங்கிய நிலையில் தவறவிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.மேலும் பணப்பை காணாமல் போன உரிமையாளர் என குறிப்பிடப்பட்ட நபர் காவல்துறை முன்னிலையில் தான் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்திருந்ததை அடுத்து கல்முனை உதவி காவல்துறை அத்தியட்சகர் .எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக காவல்நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் முன்னிலையில் காணாமல் போன பணப்பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement