• May 04 2026

யானையின் அகோரம்; சிறுமி, முதியவர் பலி! அதிகாலையில் பயங்கரம்

Chithra / May 4th 2026, 12:47 pm
image

இலங்கையின் இரு வேறு பகுதிகளில் இன்று காலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சிறுமி மற்றும் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின்  கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரலாங்குளம் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.


எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நவுண்டனியமாடு பகுதியில் அமைந்துள்ள நெல் வயல்களில், பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இன்று காலை சுமார் 08:00 மணியளவில்  இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


உயிரிழந்தவர் மாவடிவேம்பு 02, நௌக்கராசு தெருவைச் சேர்ந்த 76 வயதுடைய ஆறுமுகம் கண்டுமணி  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவரின் மருமகன் இச்சம்பவம் இன்று அதிகாலையிலேயே நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.


இதேவேளை பொலன்னறுவை, அரலகங்வில  பகுதியில் இன்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த  சம்பவத்தில் அரலகங்வில, ரத்மெல்தென்ன, இலக்கம் 180 என்ற முகவரியில் வசித்து வந்த ஆர்.டி. செனிலி தினேத்மா என்ற முன்பள்ளி மாணவியே உயிரிழந்துள்ளார்.


இன்று அதிகாலை காட்டு யானை வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த தாய் எழுந்த சென்ற சமயம் யானை வீட்டின் சுவரைத் தாக்கியுள்ளது.


இதில் சுவர் இடிந்து சிறுமியின் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


யானை – மனித மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் முதியவரும் சிறுமியும் உயிரிழந்த இந்த இரட்டை சோகச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யானையின் அகோரம்; சிறுமி, முதியவர் பலி அதிகாலையில் பயங்கரம் இலங்கையின் இரு வேறு பகுதிகளில் இன்று காலை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சிறுமி மற்றும் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின்  கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரலாங்குளம் பகுதியில், காட்டு யானை தாக்கியதில் 76 வயதுடைய முதியவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள நவுண்டனியமாடு பகுதியில் அமைந்துள்ள நெல் வயல்களில், பயிர்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இன்று காலை சுமார் 08:00 மணியளவில்  இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.உயிரிழந்தவர் மாவடிவேம்பு 02, நௌக்கராசு தெருவைச் சேர்ந்த 76 வயதுடைய ஆறுமுகம் கண்டுமணி  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் மருமகன் இச்சம்பவம் இன்று அதிகாலையிலேயே நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இதேவேளை பொலன்னறுவை, அரலகங்வில  பகுதியில் இன்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த  சம்பவத்தில் அரலகங்வில, ரத்மெல்தென்ன, இலக்கம் 180 என்ற முகவரியில் வசித்து வந்த ஆர்.டி. செனிலி தினேத்மா என்ற முன்பள்ளி மாணவியே உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை காட்டு யானை வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த தாய் எழுந்த சென்ற சமயம் யானை வீட்டின் சுவரைத் தாக்கியுள்ளது.இதில் சுவர் இடிந்து சிறுமியின் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இச்சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.யானை – மனித மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் முதியவரும் சிறுமியும் உயிரிழந்த இந்த இரட்டை சோகச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement