'நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்திற்காகப் போராடுவோம்' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வு யாழில் இன்று(01) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று(01) காலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலந்து கொண்டு இனம்,மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்திற்காகப் குரல் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், மதத் தலைவர்கள், மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் , இணைப்பாளர், தோட்டதொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
யாழில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வு. 'நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்திற்காகப் போராடுவோம்' எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வு யாழில் இன்று(01) இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது இன்று(01) காலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலந்து கொண்டு இனம்,மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்திற்காகப் குரல் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், மதத் தலைவர்கள், மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள் , இணைப்பாளர், தோட்டதொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.