• Aug 20 2026

செம்மணி 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு; மேலும் 10 என்புக்கூடுகள் அடையாளம்

Chithra / Aug 19th 2026, 10:34 am
image


செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி 3 ஆம் கட்டத்தின் 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.


இதனிடையே, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் 55ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் மேலும் 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், கூட்டாகக் காணப்பட்ட மூன்று என்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.


மேலும், அகழ்வுப் பணிகளின்போது சான்றுப் பொருட்களாக தாயத்து, நாணயம் மற்றும் சிறிய இரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.


அதனடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.


செம்மணி 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு; மேலும் 10 என்புக்கூடுகள் அடையாளம் செம்மணி மனித புதை குழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி 3 ஆம் கட்டத்தின் 56 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.இதனிடையே, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் 55ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் மேலும் 10 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், கூட்டாகக் காணப்பட்ட மூன்று என்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.மேலும், அகழ்வுப் பணிகளின்போது சான்றுப் பொருட்களாக தாயத்து, நாணயம் மற்றும் சிறிய இரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.அதனடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 109 நாள் அகழ்வு பணிகளின் போது, 582 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement