• Feb 28 2025

ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!

Tharmini / Feb 27th 2025, 2:33 pm
image

முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில்  மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல்   2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும்,  மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல்  2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும்,ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு  முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க  கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் ரூபாயினையும் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது  1,144 மில்லியன் ரூபாய் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.அந்தவகையில்  மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல்   2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும்,  மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல்  2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும்,ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு  முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க  கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் ரூபாயினையும் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது  1,144 மில்லியன் ரூபாய் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement