• May 19 2024

மஹரகம பகுதியில் நிலவும் அசாதாரண நிலை..! மக்கள் அவதி!samugammedia

Tamil nila / Dec 11th 2023, 7:23 pm
image

Advertisement

நாளாந்தம் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் மஹரகம நகரில் உள்ள பொதுக் கழிவறை முறையான பராமரிப்பு இன்மையால் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக நிலவி வரும் குறித்த பிரச்சினையால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏராளமான மக்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் மஹரகம பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

தங்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட பொது கழிப்பறைகள் மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில், இந்த கழிப்பறை சீரமைக்கப்பட்டது, ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்துவதில் தற்போது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கனமழையால் கழிவறையில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து நகரின் வடிகால் அமைப்பில் சேர்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதன் காரணமாக மஹரகம பொதுச் சந்தையில் வியாபாரம் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கழிவறை அமைப்பிற்கு மிக அருகாமையில் உள்ள மஹரகம நகரசபை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மஹரகம பகுதியில் நிலவும் அசாதாரண நிலை. மக்கள் அவதிsamugammedia நாளாந்தம் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் மஹரகம நகரில் உள்ள பொதுக் கழிவறை முறையான பராமரிப்பு இன்மையால் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டது.நீண்ட நாட்களாக நிலவி வரும் குறித்த பிரச்சினையால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.ஏராளமான மக்கள் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் மஹரகம பகுதிக்கு வந்து செல்கின்றனர்.தங்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட பொது கழிப்பறைகள் மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில், இந்த கழிப்பறை சீரமைக்கப்பட்டது, ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்துவதில் தற்போது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் கனமழையால் கழிவறையில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து நகரின் வடிகால் அமைப்பில் சேர்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக மஹரகம பொதுச் சந்தையில் வியாபாரம் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.கழிவறை அமைப்பிற்கு மிக அருகாமையில் உள்ள மஹரகம நகரசபை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement