• Nov 28 2024

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் புகழ்பெற்ற ஜோதிர்லிங்க அருங்காட்சியம் திறந்து வைப்பு..!!

Tamil nila / Feb 5th 2024, 9:30 pm
image

இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டது.


பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.


மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளரும் இலங்கை நிருவாக குழு உறுப்பினருமான சகோதரர் வீ.கே.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் தெய்வீக சகோதரர் சார்லி ஹொஹ், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி செயலாளர் மேனகா, கிராம சேவகர், பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இந் நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக் கூடத்தின் நினைவு படிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து சிவலிங்க தோற்றத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து வரலாற்று புகழ்பெற்ற 12 சிவ ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜோதிர்லிங்கக் கலைக்கூடமும் திறந்து வைக்கப்பட்டது.



தொடர்ந்து நிகழ்வு மங்கல விளக்கேற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி அதிதி உரைகள் இடம் பெற்று வருகை தந்த அதிதிகளை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் பிரசாதமும் வழங்கி வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் புகழ்பெற்ற ஜோதிர்லிங்க அருங்காட்சியம் திறந்து வைப்பு. இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயிரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டது.பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளரும் இலங்கை நிருவாக குழு உறுப்பினருமான சகோதரர் வீ.கே.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் தெய்வீக சகோதரர் சார்லி ஹொஹ், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி செயலாளர் மேனகா, கிராம சேவகர், பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இந் நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக் கூடத்தின் நினைவு படிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து சிவலிங்க தோற்றத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியான மண்டபம் திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து இந்தியாவிலிருந்து வரலாற்று புகழ்பெற்ற 12 சிவ ஆலயங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜோதிர்லிங்கக் கலைக்கூடமும் திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து நிகழ்வு மங்கல விளக்கேற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி அதிதி உரைகள் இடம் பெற்று வருகை தந்த அதிதிகளை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் பிரசாதமும் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement