• Nov 25 2024

மொட்டு கட்சியின் தவறான தீர்மானங்களே அதன் வீழ்ச்சிக்குக் காரணம்! – அமைச்சர் காஞ்சன பகிரங்கம்

Chithra / Aug 5th 2024, 12:07 pm
image

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன  விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.  

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாகவே தீர்மானம் மேற்கொண்டோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியது புதிய விடயமல்ல.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் சுயாதீன வேட்பாளராக முன்னிலையாவதாக ஜனாதிபதி அறிவித்தார். தற்போதைய நிலையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுன கட்சி இன்று பல வகைகளிலும் பிளவுபட்டுள்ளது.

கட்சியில் மேற்கொள்ளப்படும் ஒரு சில தீர்மானங்களினாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. 

2020 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.

ஆனால் தற்போது 24க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். 

எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு காணப்படுகின்றது. என அமைச்சர் மேலும்  தொிவித்தாா்.

மொட்டு கட்சியின் தவறான தீர்மானங்களே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் – அமைச்சர் காஞ்சன பகிரங்கம்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன  விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.  ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாகவே தீர்மானம் மேற்கொண்டோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியது புதிய விடயமல்ல.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் சுயாதீன வேட்பாளராக முன்னிலையாவதாக ஜனாதிபதி அறிவித்தார். தற்போதைய நிலையில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.இவ்வாறான பின்னணியில் பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுன கட்சி இன்று பல வகைகளிலும் பிளவுபட்டுள்ளது.கட்சியில் மேற்கொள்ளப்படும் ஒரு சில தீர்மானங்களினாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி 149 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.ஆனால் தற்போது 24க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு காணப்படுகின்றது. என அமைச்சர் மேலும்  தொிவித்தாா்.

Advertisement

Advertisement

Advertisement