எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டிலுள்ள எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்வதன் மூலமும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தங்களது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் முன்னிலையில் வாக்களிப்பதன் மூலமும் தேர்தல் சட்டத்தின்படி வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் முகவரிக்கு வாக்காளரின் பெயர், வாக்கெடுப்பு நிலையம், தேர்தல் நடைபெறும் திகதி, நேரம் என்பன அடங்கிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் விநியோகிக்கப்படும்.
எனவே, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வெளியீடு இன்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாக்களிப்பு நிலையங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல் - தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டிலுள்ள எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்வதன் மூலமும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர் தங்களது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் முன்னிலையில் வாக்களிப்பதன் மூலமும் தேர்தல் சட்டத்தின்படி வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும்.வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் முகவரிக்கு வாக்காளரின் பெயர், வாக்கெடுப்பு நிலையம், தேர்தல் நடைபெறும் திகதி, நேரம் என்பன அடங்கிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் விநியோகிக்கப்படும். எனவே, தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வெளியீடு இன்றி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் போலியானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.