• Nov 25 2024

திருகோணமலையில் கேரள செண்டை மேளக் கலைஞர்களின் கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம்!

Tharun / Mar 14th 2024, 7:04 pm
image

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட பூஜைகளுடன்,  மிக சிறப்பாக நடைபெற்றது.


சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து கேரள செண்டை மேளம் முழங்க, பரதநாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்வு, குதிரையாட்டம், பறவையாட்டம்,கோலாட்டம் உட்பட  பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற நகர்வலத்தில்  பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.


அத்துடன் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர் பவனியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடை பவனியில் கலந்துகொண்டார்.


கோணேஸ்வரரின் இறுதிநாள் நகர்வலத்தில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்காக  ஆளுநரின் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல், தேநீர், பிரசாதங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.


இப்பெருவிழாவில் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல்  அமைச்சர் ஜீவன் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நலன்புரி அமைப்பின் செயலாளர் குகதாசன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், அரசியல் தலைமைகள், அரச உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், சிவில் அமைப்பினர்கள் உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.


திருகோணமலையில் கேரள செண்டை மேளக் கலைஞர்களின் கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட பூஜைகளுடன்,  மிக சிறப்பாக நடைபெற்றது.சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து கேரள செண்டை மேளம் முழங்க, பரதநாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்வு, குதிரையாட்டம், பறவையாட்டம்,கோலாட்டம் உட்பட  பல்வேறு கலை நிகழ்வுகளுடன் இடம்பெற்ற நகர்வலத்தில்  பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.அத்துடன் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர் பவனியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடை பவனியில் கலந்துகொண்டார்.கோணேஸ்வரரின் இறுதிநாள் நகர்வலத்தில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்காக  ஆளுநரின் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல், தேநீர், பிரசாதங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.இப்பெருவிழாவில் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல்  அமைச்சர் ஜீவன் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நலன்புரி அமைப்பின் செயலாளர் குகதாசன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், அரசியல் தலைமைகள், அரச உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், சிவில் அமைப்பினர்கள் உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement