• Sep 19 2024

தோட்ட வீடுகள் வரிசையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்! - 12 வீடுகள் சேதம்

Chithra / Jan 16th 2023, 9:59 am
image

Advertisement

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தின் மிட்லண்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளின் வரிசையில் நேற்று (15) இரவு தீ பரவியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 8.30 மணியளவில் வீடொன்றில் ஆரம்பித்த தீ ஏனைய வீடுகளுக்கும் பரவியதுடன், 10 தோட்ட வீடுகளில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தீயினால் இடம்பெயர்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் பெருந்தொகையானோர் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்ததால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தலவாக்கலை பொலிஸாருடன் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த குழந்தைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் அதே தோட்டத்தில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


தோட்ட வீடுகள் வரிசையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் - 12 வீடுகள் சேதம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தோட்டத்தின் மிட்லண்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளின் வரிசையில் நேற்று (15) இரவு தீ பரவியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.இரவு 8.30 மணியளவில் வீடொன்றில் ஆரம்பித்த தீ ஏனைய வீடுகளுக்கும் பரவியதுடன், 10 தோட்ட வீடுகளில் வசிக்கும் 12 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தீயினால் இடம்பெயர்ந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.தீ விபத்து ஏற்பட்ட போது தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் பெருந்தொகையானோர் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்ததால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தலவாக்கலை பொலிஸாருடன் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த குழந்தைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் அதே தோட்டத்தில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement