• May 19 2024

போர்க் குற்றங்களில் ஈடுபட்டோருக்கெதிராக அமெரிக்காவில் தனிச் சட்டம்: இலங்கைக்கும் சிக்கல்?

Sharmi / Jan 16th 2023, 10:03 am
image

Advertisement

எந்தவொரு நாட்டிலேனும் ஒருவர் போர்க்குற்றங்களை இழைத்திருந்தால்,அவர் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் அவரைத் தண்டிப்பதற்கான தனிச்சட்டம் அமெரிக்க அதிபர் பைடனின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டத்தைப் பொறுத்தமட்டில், அந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்குள் அல்லது அமெரிக்காவுக்கு வெளியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்கக் குடிமக்களை அல்லது அமெரிக்கா இராணுவத்தினரை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கமுடியும். 


தற்போதைய சட்டத்தின் மூலம்இ எந்தவொரு நாட்டிலேனும் போர்க்குற்றமிழைத்த எந்தவொரு நாட்டைச் சேர்ந்தவராக இருப்பினும், அவர் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.


இந்நிலையில் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்  இடம்பெற்றதாக கூறப்படும்  போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட இலங்கையின் முக்கிய அதிகாரிகள் அமெரிக்கா செல்வதிலும் புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


போர்க் குற்றங்களில் ஈடுபட்டோருக்கெதிராக அமெரிக்காவில் தனிச் சட்டம்: இலங்கைக்கும் சிக்கல் எந்தவொரு நாட்டிலேனும் ஒருவர் போர்க்குற்றங்களை இழைத்திருந்தால்,அவர் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் அவரைத் தண்டிப்பதற்கான தனிச்சட்டம் அமெரிக்க அதிபர் பைடனின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.அமெரிக்காவில் இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டத்தைப் பொறுத்தமட்டில், அந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்குள் அல்லது அமெரிக்காவுக்கு வெளியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்கக் குடிமக்களை அல்லது அமெரிக்கா இராணுவத்தினரை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கமுடியும். தற்போதைய சட்டத்தின் மூலம்இ எந்தவொரு நாட்டிலேனும் போர்க்குற்றமிழைத்த எந்தவொரு நாட்டைச் சேர்ந்தவராக இருப்பினும், அவர் அமெரிக்காவில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.இந்நிலையில் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்  இடம்பெற்றதாக கூறப்படும்  போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட இலங்கையின் முக்கிய அதிகாரிகள் அமெரிக்கா செல்வதிலும் புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement