• Apr 15 2026

வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இலங்கையில் தென்பட்டது

Chithra / Mar 3rd 2026, 8:26 pm
image

 


இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணத்தை இலங்கையில் இன்று காணக்கூடியதாக இருந்தது.


புத்தளம் உடப்பு கிராமத்தின் திரௌபதி அம்மன் இந்து ஆலயத்தின் முன்பக்கமாக மாலை 6.35 மணியளவில் இந்த அரிய காட்சியைக் காணக்கிடைத்தது.


இந்நிலையில் ஆலயத்தின் பூஜைகள் கிரகணம் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்றன.


வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். 


இது ஒரு முழுச் சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், சந்திரன் அடிவானத்திற்கு (Horizon) கீழே அமைந்திருப்பதால், இலங்கையர்களுக்கு இது ஒரு பகுதிச் சந்திர கிரகணமாகவே காட்சியளிக்கும். மேகமூட்டமற்ற தெளிவான வானம் இருக்கும் பட்சத்தில், கிழக்கு அடிவானம் நன்கு தெரியக்கூடிய உயரமான அல்லது திறந்தவெளியில் இருந்து இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இலங்கையில் தென்பட்டது  இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணத்தை இலங்கையில் இன்று காணக்கூடியதாக இருந்தது.புத்தளம் உடப்பு கிராமத்தின் திரௌபதி அம்மன் இந்து ஆலயத்தின் முன்பக்கமாக மாலை 6.35 மணியளவில் இந்த அரிய காட்சியைக் காணக்கிடைத்தது.இந்நிலையில் ஆலயத்தின் பூஜைகள் கிரகணம் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்றன.வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இது ஒரு முழுச் சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், சந்திரன் அடிவானத்திற்கு (Horizon) கீழே அமைந்திருப்பதால், இலங்கையர்களுக்கு இது ஒரு பகுதிச் சந்திர கிரகணமாகவே காட்சியளிக்கும். மேகமூட்டமற்ற தெளிவான வானம் இருக்கும் பட்சத்தில், கிழக்கு அடிவானம் நன்கு தெரியக்கூடிய உயரமான அல்லது திறந்தவெளியில் இருந்து இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement