• Oct 04 2024

மீனவர்கள் பிரச்சினை; இந்தியா - இலங்கை இடையே கூட்டு நடவடிக்கை குழு - மு.க.ஸ்டாலின் வலியுறுத்து!

Chithra / Jan 25th 2024, 3:11 pm
image

Advertisement

 

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா - இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (24) கடிதம் எழுதியுள்ளார்.

இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் பிரச்சினை; இந்தியா - இலங்கை இடையே கூட்டு நடவடிக்கை குழு - மு.க.ஸ்டாலின் வலியுறுத்து  மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா - இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே தமிழக முதல்வர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை கடற்படையினரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளிவிவகார அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (24) கடிதம் எழுதியுள்ளார்.இத்தகைய போக்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement