• Feb 27 2026

2024 இல் 293 குடும்பங்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்த வனஇலாகா!

shanuja / Feb 26th 2026, 5:22 pm
image


செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட  பகுதிகளில்  கிட்டத்தட்ட  300 ற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பூர்வீக காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. 


வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது..


இதன்போது கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட வனவளத்திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் காணிகளின் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

 செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம், முசல்குத்திக்குளம் ஆகிய கிராமங்களில் 1977 ஆம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். 


பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்து மீளக்குடியமர சென்ற நிலையில் அதற்கு வனவளத் திணைக்களம் தடை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கான முடிவினை இன்று எடுக்க வேண்டும் எனj் தெரிவித்தார்.


இதன்போது கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர்,

குறித்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என 293 குடும்பங்கள் அங்கு மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பலர் காணிக்குரிய ஆவணங்களையும் வைத்துள்ளனர்.அந்தவகையில் மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாம் கோரியிருந்தோம். 


அந்த காணிகளுக்குள் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள் உள்ளது, பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன,இடிபாடைந்த கட்டடங்கள் உள்ளது. இந்த காணிகளை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்த வனவளத்திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டு அவற்றை வர்த்தமானி அறிவிப்பு செய்து கையகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். 


பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும்,குடியேற்ற உத்தியோகத்தரின் பங்களிப்புடனேயே இது வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளதாக வனவளத்திணைக்கள அதிகாரி தெரிவித்தார். எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என பிரதேச செயலாளர் மறுத்திருந்ததுடன் எமக்கு எந்த ஒரு விடயமும் தெரியப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார். 


இதனையடுத்து குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி முடிவினை எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.  


இதேவேளை கடந்த கூட்டங்களில் கோரிக்கை விடுவிக்கப்பட்டதற்கமைய வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள  17 குளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 24 குளங்கள் தொடர்பாக திணைக்களம் கள ஆய்வு செய்து வருவதாகவும் 5 குளங்களை விடுவிக்க முடியாது என திணைக்களத்தினால் சுட்டிகாட்டப்பட்டிருந்தது.

2024 இல் 293 குடும்பங்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்த வனஇலாகா செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட  பகுதிகளில்  கிட்டத்தட்ட  300 ற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பூர்வீக காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.இதன்போது கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட வனவளத்திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் காணிகளின் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம், முசல்குத்திக்குளம் ஆகிய கிராமங்களில் 1977 ஆம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர். பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் திரும்பி வந்து மீளக்குடியமர சென்ற நிலையில் அதற்கு வனவளத் திணைக்களம் தடை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கான முடிவினை இன்று எடுக்க வேண்டும் எனj் தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர்,குறித்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் என 293 குடும்பங்கள் அங்கு மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் பலர் காணிக்குரிய ஆவணங்களையும் வைத்துள்ளனர்.அந்தவகையில் மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாம் கோரியிருந்தோம். அந்த காணிகளுக்குள் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள் உள்ளது, பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன,இடிபாடைந்த கட்டடங்கள் உள்ளது. இந்த காணிகளை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்த வனவளத்திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டு அவற்றை வர்த்தமானி அறிவிப்பு செய்து கையகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும்,குடியேற்ற உத்தியோகத்தரின் பங்களிப்புடனேயே இது வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளதாக வனவளத்திணைக்கள அதிகாரி தெரிவித்தார். எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என பிரதேச செயலாளர் மறுத்திருந்ததுடன் எமக்கு எந்த ஒரு விடயமும் தெரியப்படுத்தப்படவில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர், வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி முடிவினை எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இதேவேளை கடந்த கூட்டங்களில் கோரிக்கை விடுவிக்கப்பட்டதற்கமைய வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள  17 குளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 24 குளங்கள் தொடர்பாக திணைக்களம் கள ஆய்வு செய்து வருவதாகவும் 5 குளங்களை விடுவிக்க முடியாது என திணைக்களத்தினால் சுட்டிகாட்டப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement