மின் துண்டிப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. எமது நாட்டை பொறுத்த வரைக்கும் தேசிய பாதுகாப்பு பொருளாதாரம் என்பவற்றிலும் தாக்கம் செலுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மின்வெட்டு இடம்பெற்றது அதன் மூலம் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது.
விசாரணைகள் நடத்தப்பட்டது அந்த விசாரணை அறிக்கை தற்போது குப்பை தொட்டிக்குள் காணப்படுகின்றது.
மின் துண்டிப்பை தடுக்க அரசாங்கத்திடம் தீர்வு வழங்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது.
கடந்த வருடத்தில் நூற்றுக்கு 15 வீதம் வற்வரி அதிகரிக்கப்பட்டு பொருட்கள் விலைகள் அதிகரிக்கப்பட்டது.
ஐ.எம்.எப். கடனுக்கு நிபந்தனைகளை போடுகிறது. அதற்கு வற்வரி 18 வீதமாக உயரவுள்ளது.
எல்லா துறைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வற்வரி சம்பந்தமான இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்றில் போதிய கோரம் இல்லாததால் பாராளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கிறார்கள். நாடு அதலபாதாளத்தில் போகிறது.
ரணில் விக்கிரமசிங்க எம்மை மீட்டார் என பலர் நம்புகின்றனர். ஆனால் அப்படி இல்லை. எமது நாடு வங்குரோத்து அடைந்துள்ளது.
லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தாரை வார்க்கப்படுகிறது. அதன் மூலம் டொலரை பெற ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் முயல்கிறது.
அது வரிசை யுகத்தில் மீண்டதாக கருத முடியாது. மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாதுள்ளது. மருந்து தட்டுப்பாடால் மக்கள் மரணத்தை தழுவுகின்றார்.
பாராளுமன்றில் கூட கோரத்தை கொண்டு வர முடியாத பெயிலியர் அரசாங்கத்தை விரட்டி அடிக்க வேண்டும்.
10 மாதங்களில் இந்த நாட்டை வஞ்சித்த ஈவிரக்கமற்ற அனைவரையும் விரட்டி அடித்து அரசாங்கத்தை அமைக்க மக்கள் தயாராக வேண்டும்.என்றார்.
மின் துண்டிப்பை தடுக்க அரசிடம் தீர்வு இல்லை. தோல்வியடைந்த ரணில் கடுமையாக சாடும் ஜே.வி.பி மின் துண்டிப்பு என்பது சாதாரண விடயம் அல்ல. எமது நாட்டை பொறுத்த வரைக்கும் தேசிய பாதுகாப்பு பொருளாதாரம் என்பவற்றிலும் தாக்கம் செலுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த ஆண்டு மின்வெட்டு இடம்பெற்றது அதன் மூலம் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டது. விசாரணைகள் நடத்தப்பட்டது அந்த விசாரணை அறிக்கை தற்போது குப்பை தொட்டிக்குள் காணப்படுகின்றது.மின் துண்டிப்பை தடுக்க அரசாங்கத்திடம் தீர்வு வழங்க முடியாது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது.கடந்த வருடத்தில் நூற்றுக்கு 15 வீதம் வற்வரி அதிகரிக்கப்பட்டு பொருட்கள் விலைகள் அதிகரிக்கப்பட்டது.ஐ.எம்.எப். கடனுக்கு நிபந்தனைகளை போடுகிறது. அதற்கு வற்வரி 18 வீதமாக உயரவுள்ளது.எல்லா துறைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.வற்வரி சம்பந்தமான இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்றில் போதிய கோரம் இல்லாததால் பாராளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கிறார்கள். நாடு அதலபாதாளத்தில் போகிறது.ரணில் விக்கிரமசிங்க எம்மை மீட்டார் என பலர் நம்புகின்றனர். ஆனால் அப்படி இல்லை. எமது நாடு வங்குரோத்து அடைந்துள்ளது.லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தாரை வார்க்கப்படுகிறது. அதன் மூலம் டொலரை பெற ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் முயல்கிறது. அது வரிசை யுகத்தில் மீண்டதாக கருத முடியாது. மக்கள் மூன்று வேளை சாப்பிட முடியாதுள்ளது. மருந்து தட்டுப்பாடால் மக்கள் மரணத்தை தழுவுகின்றார்.பாராளுமன்றில் கூட கோரத்தை கொண்டு வர முடியாத பெயிலியர் அரசாங்கத்தை விரட்டி அடிக்க வேண்டும்.10 மாதங்களில் இந்த நாட்டை வஞ்சித்த ஈவிரக்கமற்ற அனைவரையும் விரட்டி அடித்து அரசாங்கத்தை அமைக்க மக்கள் தயாராக வேண்டும்.என்றார்.