• Nov 06 2024

தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் வேலையில் அரசு! து.ரவிகரன் குற்றச்சாட்டு

Chithra / Sep 5th 2024, 10:27 am
image

Advertisement



தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்பட்டு வருகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு  மாவட்ட கடற்பிரதேசங்களை அண்டிய சில பகுதிகளில் அந்நிய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலையடுத்து நேற்றையதினம் இரவு சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு கொக்குளாய், கர்நாட்டுக்கேணி,கொக்குதொடுவாய் ஆகிய பகுதிகளின் கடற்பரப்புக்கு நேராக சுமார் 100 மீற்றர் தூரத்தில் பல நூற்றுக்கணக்கான படகுகள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை என  அத்துமீறி நுழைந்து தொழில் செய்வதனால் எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும்  மோசமாக பாதிக்கப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் கூட எங்களை பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான  மோசமான செயற்பாடுகளை செய்ய இந்த அரசு தான் உடந்தையாக இருக்கின்றது என தெரிவித்திருந்தார்.

தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் வேலையில் அரசு து.ரவிகரன் குற்றச்சாட்டு தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்பட்டு வருகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.முல்லைத்தீவு  மாவட்ட கடற்பிரதேசங்களை அண்டிய சில பகுதிகளில் அந்நிய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த விடயம் தொடர்பாக  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலையடுத்து நேற்றையதினம் இரவு சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார்.முல்லைத்தீவு கொக்குளாய், கர்நாட்டுக்கேணி,கொக்குதொடுவாய் ஆகிய பகுதிகளின் கடற்பரப்புக்கு நேராக சுமார் 100 மீற்றர் தூரத்தில் பல நூற்றுக்கணக்கான படகுகள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை என  அத்துமீறி நுழைந்து தொழில் செய்வதனால் எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும்  மோசமாக பாதிக்கப்படுகின்றது.தேர்தல் காலங்களில் கூட எங்களை பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்பட்டு வருகின்றது.இவ்வாறான  மோசமான செயற்பாடுகளை செய்ய இந்த அரசு தான் உடந்தையாக இருக்கின்றது என தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement