• Sep 03 2026

வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இம்ரான் எம்.பி. வலியுறுத்து

Chithra / Sep 2nd 2026, 10:34 am
image


வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும், மக்களின் வருமானம் அதற்கேற்ப அதிகரிக்கவில்லை.


இதன் காரணமாக பல குடும்பங்கள் மூன்று வேளை உணவைக்கூட பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.


நாட்டில் அதிகளவான அரச ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெறுபவர்களாக உள்ள நிலையில், பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் குடும்பத்தின் உணவுத் தேவைகளை சமாளிக்க முடியாமல் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இம்ரான் மகரூப் குறிப்பிட்டார்.


இந்த நிலைமை காரணமாக பிள்ளைகளின் உணவுத் தேவைகளை முறையாகப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் போசாக்குக் குறைபாடுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.


மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், அந்தப் பொறுப்பை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இம்ரான் எம்.பி. வலியுறுத்து வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும், மக்களின் வருமானம் அதற்கேற்ப அதிகரிக்கவில்லை.இதன் காரணமாக பல குடும்பங்கள் மூன்று வேளை உணவைக்கூட பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.நாட்டில் அதிகளவான அரச ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெறுபவர்களாக உள்ள நிலையில், பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் குடும்பத்தின் உணவுத் தேவைகளை சமாளிக்க முடியாமல் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இம்ரான் மகரூப் குறிப்பிட்டார்.இந்த நிலைமை காரணமாக பிள்ளைகளின் உணவுத் தேவைகளை முறையாகப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் போசாக்குக் குறைபாடுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், அந்தப் பொறுப்பை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement