• Feb 12 2026

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமையுடன் வழங்க அரசு முன்வர வேண்டும்!

shanuja / Jan 24th 2026, 4:44 pm
image


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமையுடன் வழங்க  அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


 காணி வீட்டுரிமை சம்பந்தமான கருத்து பரிமாற்றம் சம்பந்தமான கருத்தரங்கு, இன்று 24 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஹட்டன் சிவாலயா மண்டபத்தில் காணி வீட்டுரிமைக்காண நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.


நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வீ.புத்திரசிகாமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சதாசிவம்,திரு.கணபதி கணகராஜ் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செம்பகவள்ளி மற்றும் சட்ட தரணிகள் பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள் புத்திஜீவிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் 60 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் கருத்து தெரிவித்த சிவில் அமைப்பின் தலைவர் மற்றும் காணி வீட்டுரிமை நிறுவனத்தின் தலைவர் எஸ், டி, கணேசலிங்கம் கடந்த 202 ஆண்டு காலமாக பெருந்தோட்ட நிறுவனங்களில் பணி புரிந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமைக்காண நிலம் வழங்க இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வர வேண்டும்.


 அத்துடன் ஒவ்வொரு பெருந்தோட்டமும் முழுமை படுத்த பட்ட கிராமங்களாக அமைய வேண்டும்.அக் கிராமங்கள் அனைத்தும் சமய ஆலயங்கள் பாடசாலைகள் அஞ்சலகம் கிராமிய வைத்திய சாலை போன்ற வற்றை அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மற்றும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனையோர் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எடுத்து கூறினார்கள்.




பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமையுடன் வழங்க அரசு முன்வர வேண்டும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமையுடன் வழங்க  அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   காணி வீட்டுரிமை சம்பந்தமான கருத்து பரிமாற்றம் சம்பந்தமான கருத்தரங்கு, இன்று 24 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஹட்டன் சிவாலயா மண்டபத்தில் காணி வீட்டுரிமைக்காண நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வீ.புத்திரசிகாமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சதாசிவம்,திரு.கணபதி கணகராஜ் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செம்பகவள்ளி மற்றும் சட்ட தரணிகள் பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள் புத்திஜீவிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் 60 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்வில் கருத்து தெரிவித்த சிவில் அமைப்பின் தலைவர் மற்றும் காணி வீட்டுரிமை நிறுவனத்தின் தலைவர் எஸ், டி, கணேசலிங்கம் கடந்த 202 ஆண்டு காலமாக பெருந்தோட்ட நிறுவனங்களில் பணி புரிந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமைக்காண நிலம் வழங்க இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வர வேண்டும். அத்துடன் ஒவ்வொரு பெருந்தோட்டமும் முழுமை படுத்த பட்ட கிராமங்களாக அமைய வேண்டும்.அக் கிராமங்கள் அனைத்தும் சமய ஆலயங்கள் பாடசாலைகள் அஞ்சலகம் கிராமிய வைத்திய சாலை போன்ற வற்றை அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மற்றும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனையோர் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எடுத்து கூறினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement