உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு பதின்நான்காவது தமிழ் மாநாடு எதிர்வரும் ஆவணி மாதம் பிரித்தானியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் ஆவணி மாதம் 29,30ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் ஐக்கியத்துக்காகவும் சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு திட்டமும் இலங்கை அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
1974ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. 13வது மாநாடு 2017ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர் லண்டன் விழா ஏற்பாட்டாளர் சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் உள்ளிட்ட குறித்த அமைப்பின் சர்வதேச கிளைகளின் பிரமுகர்கள், இலங்கை கிளையின் தலைவர் அருணாசலம் சத்தியானந்தன் மற்றும் தேசிய அமைப்பாளர் தே.செந்தில்வேலவர் உள்ளிட்டோர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஆவணியில் 14ஆவது தமிழ் மாநாடு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு பதின்நான்காவது தமிழ் மாநாடு எதிர்வரும் ஆவணி மாதம் பிரித்தானியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் ஆவணி மாதம் 29,30ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் ஐக்கியத்துக்காகவும் சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.குறித்த மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கான தீர்வு திட்டமும் இலங்கை அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.1974ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. 13வது மாநாடு 2017ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர் லண்டன் விழா ஏற்பாட்டாளர் சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் உள்ளிட்ட குறித்த அமைப்பின் சர்வதேச கிளைகளின் பிரமுகர்கள், இலங்கை கிளையின் தலைவர் அருணாசலம் சத்தியானந்தன் மற்றும் தேசிய அமைப்பாளர் தே.செந்தில்வேலவர் உள்ளிட்டோர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.