தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்ற பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்போது செய்வதாகக் கூறுவது போல, சிறிய கார்களிலோ அல்லது பேருந்துகளிலோ பயணிப்பதில் தமக்கு பிரச்சினையில்லை.
எனினும் அதனைவிட, அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே முக்கியமானது.
நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்வித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு மூன்று வேளை உணவை உறுதி செய்தாலே போதும் - நாமல் சுட்டிக்காட்டு தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்ற பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்துள்ளனர். இந்தநிலையில், அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்போது செய்வதாகக் கூறுவது போல, சிறிய கார்களிலோ அல்லது பேருந்துகளிலோ பயணிப்பதில் தமக்கு பிரச்சினையில்லை.எனினும் அதனைவிட, அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே முக்கியமானது.நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்வித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.