வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று(25) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 20 ஆம் திகதி கர்மாரம்பம் விநாயக வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இன்று காலை, கலச கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று காலை 05.10 மணியளவில் சகல நான்கு பக்ககோபுர கலச மஹாகும்பாபிஷேகம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, பாரிவார மூல மூர்த்திகளுக்கான மஹாகும்பாபிஷேகம் காலை 07மணிக்கு இடம்பெற்றதுடன் 08.40 முதல் 09.30 மணியில் சுபவேளையில் கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.
மஹாகும்பாபிஷேக நிகழ்வில் யாழின் பல பாகங்களிலும் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை, மஹாகும்பாபிஷேகத்தினை தொடர்ந்து எதிர்வரும் 48 நாள் மண்டலாபிஷேக உற்சவம் இடம்பெறும் குறிப்பிடத்தக்கது.