• Mar 10 2026

நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டறிந்த தேரர்

Chithra / Mar 10th 2026, 8:26 am
image


கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதிவணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.


நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.


இதன்போது, ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட மகாநாயக்க தேரர், நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.


புதிய அரசின் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர் தனது நல்லாசிகளைத் தெரிவித்தார்.


இந்த விசேட சந்திப்பில் பன்னிப்பிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையின் விகாராதிபதியுமான மகாநாயக்க தேரருடன், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய வணக்கத்துக்குரிய மாபலகம புத்தசிறி தேரரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டறிந்த தேரர் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான அதிவணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது, ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட மகாநாயக்க தேரர், நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.புதிய அரசின் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர் தனது நல்லாசிகளைத் தெரிவித்தார்.இந்த விசேட சந்திப்பில் பன்னிப்பிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையின் விகாராதிபதியுமான மகாநாயக்க தேரருடன், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய வணக்கத்துக்குரிய மாபலகம புத்தசிறி தேரரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement