• Nov 19 2024

14ஆம் திகதிக்குப் பின்னர் வேலை நிறுத்த வரலாறு முடிவுக்கு வரும்! அநுர தரப்பு சூளுரை

Chithra / Nov 1st 2024, 8:19 am
image


இலங்கையில்  பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேலைநிறுத்தம் என்றால் என்ன என்று கூட சொல்லித்தர வேண்டிய நிலை வரும் என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். 

கெஸ்பேவ நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாடு மிகவும் விரும்பத்தகாத அனுபவங்களை சந்தித்துள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு செல்கிறார்கள். அந்த நாள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், மற்றொரு நாள் அதிபர் வேலைநிறுத்தம், மற்றொரு நாள் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் வேலை நிறுத்தம், மற்றொரு நாள் தாதியர்கள், மற்றொரு நாள் உதவியாளர்கள் வேலை நிறுத்தம்.

ஒரு நாள் வீதியில் இறங்கினால், இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வேலை நிறுத்தம், மறுநாள் தனியார் பேருந்து வேலை நிறுத்தம். இது போன்ற வரலாறே காணப்படுகிறது.

இன்று நான் சொன்னதை நினைவில் வையுங்கள்.  வேலை நிறுத்த வரலாறு எதிர்காலத்தில் இல்லாதொழியும். யாருக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறீர்கள், அரசுடன் ஏதாவது பிரச்சினை என்றால் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.

இது எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல நாட்டை உருவாக்குவோம்.   இது மாற்றத்தின் காலம். இந்த வேலை நிறுத்த காலம் நவம்பர் 14க்குப் பிறகு முடிவடையும் என்றார். 

14ஆம் திகதிக்குப் பின்னர் வேலை நிறுத்த வரலாறு முடிவுக்கு வரும் அநுர தரப்பு சூளுரை இலங்கையில்  பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேலைநிறுத்தம் என்றால் என்ன என்று கூட சொல்லித்தர வேண்டிய நிலை வரும் என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். கெஸ்பேவ நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எங்கள் நாடு மிகவும் விரும்பத்தகாத அனுபவங்களை சந்தித்துள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு செல்கிறார்கள். அந்த நாள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், மற்றொரு நாள் அதிபர் வேலைநிறுத்தம், மற்றொரு நாள் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்.உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் வேலை நிறுத்தம், மற்றொரு நாள் தாதியர்கள், மற்றொரு நாள் உதவியாளர்கள் வேலை நிறுத்தம்.ஒரு நாள் வீதியில் இறங்கினால், இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வேலை நிறுத்தம், மறுநாள் தனியார் பேருந்து வேலை நிறுத்தம். இது போன்ற வரலாறே காணப்படுகிறது.இன்று நான் சொன்னதை நினைவில் வையுங்கள்.  வேலை நிறுத்த வரலாறு எதிர்காலத்தில் இல்லாதொழியும். யாருக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறீர்கள், அரசுடன் ஏதாவது பிரச்சினை என்றால் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.இது எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல நாட்டை உருவாக்குவோம்.   இது மாற்றத்தின் காலம். இந்த வேலை நிறுத்த காலம் நவம்பர் 14க்குப் பிறகு முடிவடையும் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement