• Nov 26 2024

இராணுவத்தின் பிடியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிநேசன் கோரிக்கை..!

Sharmi / Nov 25th 2024, 1:50 pm
image

மட்டக்களப்பில் இராணுவத்தின் சப்பாத்து கால்களின் கீழ் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

வடகிழக்கில் தற்போது மாவீரர் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம்(25) மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் துயிலும் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

மக்கள் இம்முறை தமது உறவுகளை நினைவு கூருவதற்கான கெடுபிடிகள் இருக்காது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஞா.சிறிநேசன் ,

மாவீரர்களின் எண்ணங்களை மனதில் சுமந்தவாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் எண்ணத்துடன் பொதுமக்கள் மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எமது மண்ணுக்காக,தமிழ் மக்களின் விடுதலைக்காக,தமிழர்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரக் காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது உயிரை அர்ப்பணித்த தியாக தன்மை கொண்ட போராளிகளை நாங்கள் என்றும் மறக்ககூடாது. அவர்களை மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.

அந்த மாதம் என்பது தமிழர்களினைப்பொறுத்த வரையில் அந்த தியாகத்தினை நினைவுகூரும் மாதமாகவுள்ளது.

அந்த வகையில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களின் நினைவினை சுமந்தவாறு நின்று கொண்டிருக்கின்றோம்.

இதேபோன்று தாண்டியடி,தரவை,கண்டலடி போன்ற இடங்களிலும் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.

இதில் தாண்டியது துயிலும் இல்லம் விசேட அதிரடிப்படையினரின் முகாமாகவுள்ளது.

அவர்களின் சப்பாத்துக்கால்களுக்கு கீழ் துயிலும் இல்லம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வேதனையான விடயம்.

துட்டகைமுனு கூட எல்லாலன் யுத்ததில் மரணித்த பின்னர் அவனுக்கு சமாதியளித்து மரியாதை அளித்ததாக அறிந்திருக்கின்றோம்.

முடியாட்சி நடந்த காலம்.ஆனால் ஜனநாயக ஆட்சி நடக்கின்ற காலத்தில் துயிலும் இல்லத்தினை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து அதில் முகாம் அமைத்து சப்பாத்து கால்களின் கீழ் எமது உறவுகளின் சமாதியை தீண்டிக்கொண்டிருப்பது ஒரு அசிங்கமான செயற்பாடு.

முகாமிலிருந்து அவர்கள் அகற்றப்படவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம்.அகற்றுவோம் என்று சொன்னார்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்த கல்லறைகள் அகற்றப்பட்டிருந்தாலும் இம்முறை இங்கு ஓரளவு சுதந்திரமாக நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


இராணுவத்தின் பிடியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும்- சிறிநேசன் கோரிக்கை. மட்டக்களப்பில் இராணுவத்தின் சப்பாத்து கால்களின் கீழ் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.வடகிழக்கில் தற்போது மாவீரர் நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம்(25) மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் துயிலும் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.மக்கள் இம்முறை தமது உறவுகளை நினைவு கூருவதற்கான கெடுபிடிகள் இருக்காது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஞா.சிறிநேசன் ,மாவீரர்களின் எண்ணங்களை மனதில் சுமந்தவாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் எண்ணத்துடன் பொதுமக்கள் மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானங்களை முன்னெடுத்து வருகின்றனர்.எமது மண்ணுக்காக,தமிழ் மக்களின் விடுதலைக்காக,தமிழர்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரக் காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது உயிரை அர்ப்பணித்த தியாக தன்மை கொண்ட போராளிகளை நாங்கள் என்றும் மறக்ககூடாது. அவர்களை மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.அந்த மாதம் என்பது தமிழர்களினைப்பொறுத்த வரையில் அந்த தியாகத்தினை நினைவுகூரும் மாதமாகவுள்ளது.அந்த வகையில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களின் நினைவினை சுமந்தவாறு நின்று கொண்டிருக்கின்றோம்.இதேபோன்று தாண்டியடி,தரவை,கண்டலடி போன்ற இடங்களிலும் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.இதில் தாண்டியது துயிலும் இல்லம் விசேட அதிரடிப்படையினரின் முகாமாகவுள்ளது.அவர்களின் சப்பாத்துக்கால்களுக்கு கீழ் துயிலும் இல்லம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.மிகவும் வேதனையான விடயம்.துட்டகைமுனு கூட எல்லாலன் யுத்ததில் மரணித்த பின்னர் அவனுக்கு சமாதியளித்து மரியாதை அளித்ததாக அறிந்திருக்கின்றோம்.முடியாட்சி நடந்த காலம்.ஆனால் ஜனநாயக ஆட்சி நடக்கின்ற காலத்தில் துயிலும் இல்லத்தினை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து அதில் முகாம் அமைத்து சப்பாத்து கால்களின் கீழ் எமது உறவுகளின் சமாதியை தீண்டிக்கொண்டிருப்பது ஒரு அசிங்கமான செயற்பாடு.முகாமிலிருந்து அவர்கள் அகற்றப்படவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம்.அகற்றுவோம் என்று சொன்னார்கள் இன்னும் அகற்றப்படவில்லை.மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்த கல்லறைகள் அகற்றப்பட்டிருந்தாலும் இம்முறை இங்கு ஓரளவு சுதந்திரமாக நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement