• Mar 21 2025

நேர்மையான புதிய கூட்டு காலத்தின் கட்டாய தேவை -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டுக்கட்சியின் தலைவர்கள் தெரிவிப்பு

Thansita / Mar 20th 2025, 9:13 pm
image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டொன்று யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தனித் தனியாகவும் அதேநேரம் புதிய கூட்டுக்களை அமைத்தும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து புதிய கூட்டொன்றை உருவாக்கியுள்ளன.

இந்தப் புதிய கூட்டானது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் வடக்குஇ கிழக்கு முழுவமும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

இந்தக் கூட்டில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்இ தமிழ்த் தேசியக் கட்சிஇ தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்இ ஐனநாயகத் தமிழரசுஇ தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து பிரிந்த அருந்தவபாலன் அணி ஆகிய தரப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

மேற்படி கட்சிகள் இணைந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளன.

இந்தப் புதிய கூட்டு உருவாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேற்படி கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று  ஊடக சந்திப்பை நடத்தியுள்ளன.

இதன்போது நேர்மையான புதிய கூட்டு காலத்தின் கட்டாய தேவை என்று மேற்படி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

நேர்மையான புதிய கூட்டு காலத்தின் கட்டாய தேவை -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டுக்கட்சியின் தலைவர்கள் தெரிவிப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து புதிய அரசியல் கூட்டொன்று யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தனித் தனியாகவும் அதேநேரம் புதிய கூட்டுக்களை அமைத்தும் போட்டியிடுகின்றன.இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து புதிய கூட்டொன்றை உருவாக்கியுள்ளன.இந்தப் புதிய கூட்டானது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் வடக்குஇ கிழக்கு முழுவமும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.இந்தக் கூட்டில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்இ தமிழ்த் தேசியக் கட்சிஇ தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்இ ஐனநாயகத் தமிழரசுஇ தமிழ் மக்கள் கூட்டணியில் இருந்து பிரிந்த அருந்தவபாலன் அணி ஆகிய தரப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.மேற்படி கட்சிகள் இணைந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளன.இந்தப் புதிய கூட்டு உருவாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேற்படி கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று  ஊடக சந்திப்பை நடத்தியுள்ளன.இதன்போது நேர்மையான புதிய கூட்டு காலத்தின் கட்டாய தேவை என்று மேற்படி கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement