அழிவின் விளிம்பில் இருக்கும் Indian Courser பறவையினத்தின் இருப்பை உறுதிசெய்யும் செயற்றிட்டத்தின் விழிப்புணர்வு பலகை வேலணை பிரதேசத்தின் மண்கும்பான் பகுதியில் நாட்டிவைக்கப்பட்டது.
அழிவின் விளிம்பில் இருக்கும் Indian Courser பறவையை பாதுகாப்பதற்காக சி.சி.எச் நிறுவனம், இயற்கை ஊக்குவிப்பு கழகம் மற்றும் Dialog நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அத்துடன் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு நெடுந்தீவு பிரதேச செயலகம், வடமாகாண சுற்றுலா பணியகம், நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் ஆகியனவும் பங்களிப்பை வழங்கிவருகின்றன.
இந்நிலையிலேயே நேற்று குறித்த பறவையினத்தின் இருப்பை உறுதிசெய்யும் செயற்றிட்டத்தின் விழிப்புணர்வு பலகை வேலணை பிரதேசத்தின் மண்கும்பான் பகுதியில் கால் நடை மேச்சற்றறைக்காக அடையாளப்படுத்தப்பட்ட அரச நிலத்தில் நாட்டிவைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலர், வேலணை பிரதேச சபையின் தவிசாளர், வேலணை பிரதேச சபை உறுப்பினர், வேலணை பிரதேச சபையின் அதிகாரிகள், Dialog நிறுவன உத்தியோகத்தர்கள், இயற்கை ஊக்குவிப்பு கழக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
அழிந்துவரும் Indian Courser பறவையினம்; வேலணையில் நாட்டப்பட்ட விழிப்புணர்வு பலகை அழிவின் விளிம்பில் இருக்கும் Indian Courser பறவையினத்தின் இருப்பை உறுதிசெய்யும் செயற்றிட்டத்தின் விழிப்புணர்வு பலகை வேலணை பிரதேசத்தின் மண்கும்பான் பகுதியில் நாட்டிவைக்கப்பட்டது.அழிவின் விளிம்பில் இருக்கும் Indian Courser பறவையை பாதுகாப்பதற்காக சி.சி.எச் நிறுவனம், இயற்கை ஊக்குவிப்பு கழகம் மற்றும் Dialog நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.அத்துடன் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு நெடுந்தீவு பிரதேச செயலகம், வடமாகாண சுற்றுலா பணியகம், நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் ஆகியனவும் பங்களிப்பை வழங்கிவருகின்றன.இந்நிலையிலேயே நேற்று குறித்த பறவையினத்தின் இருப்பை உறுதிசெய்யும் செயற்றிட்டத்தின் விழிப்புணர்வு பலகை வேலணை பிரதேசத்தின் மண்கும்பான் பகுதியில் கால் நடை மேச்சற்றறைக்காக அடையாளப்படுத்தப்பட்ட அரச நிலத்தில் நாட்டிவைக்கப்பட்டதுகுறித்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலர், வேலணை பிரதேச சபையின் தவிசாளர், வேலணை பிரதேச சபை உறுப்பினர், வேலணை பிரதேச சபையின் அதிகாரிகள், Dialog நிறுவன உத்தியோகத்தர்கள், இயற்கை ஊக்குவிப்பு கழக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது