வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும்.
ஈரமான, சேறு நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் அல்லது வயல்களில் வேலை செய்வோர் தங்கள் கால்களில் காயங்கள் அல்லது தோல் நோய்கள் இருப்பின் அவதானமாக இருத்தல் வேண்டும்.தற்போது பலர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, காயச்சல், தலைவலி, உடல் வலி என்பன ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும். குறிப்பாக அண்மையில் வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த 22 வயது இளைஞன் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் எலிக்காய்ச்சல் தீவிரம். சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்.samugammedia வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும்.ஈரமான, சேறு நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் அல்லது வயல்களில் வேலை செய்வோர் தங்கள் கால்களில் காயங்கள் அல்லது தோல் நோய்கள் இருப்பின் அவதானமாக இருத்தல் வேண்டும்.தற்போது பலர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காயச்சல், தலைவலி, உடல் வலி என்பன ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும். குறிப்பாக அண்மையில் வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த 22 வயது இளைஞன் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.